சினிமா செய்திகள்

விவாகரத்து செய்த நடிகை ஊர்வசியுடன் பகை இல்லை-மனோஜ் கே.ஜெயன் + "||" + Divorced With actress Urvashi There is no enmity Manoj K. Jayan

விவாகரத்து செய்த நடிகை ஊர்வசியுடன் பகை இல்லை-மனோஜ் கே.ஜெயன்

விவாகரத்து செய்த நடிகை ஊர்வசியுடன் பகை இல்லை-மனோஜ் கே.ஜெயன்
“எனக்கு ஊர்வசி மீது பகை உணர்வு எதுவும் இல்லை. அவரை எதிரியாகவும் கருதவில்லை. தமிழில் முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000-ல் திருமணம் நடந்தது.
தமிழில் முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குஞ்சாச்சா என்ற மகள் உள்ளார். 2008-ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.


மகள் குஞ்சாச்சா மனோஜ் கே.ஜெயனுடன் வசித்து வருகிறார். அத்துடன் ஆஷா என்பவரை மனோஜ் கே.ஜெயன் 2-வது திருமணம் செய்து கொண்டார். இதுபோல் ஊர்வசிக்கும் மறுமணம் நடந்துள்ளது. ஊர்வசிக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் குடும்ப வாழ்க்கை குறித்து மனோஜ் கே.ஜெயன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“எனக்கு ஊர்வசி மீது பகை உணர்வு எதுவும் இல்லை. அவரை எதிரியாகவும் கருதவில்லை. ஊர்வசியின் மகன், எனது மகள் குஞ்சாச்சாவை பார்க்க ஆசைப்படுவதாக தகவல் வரும். உடனே நேரில் போய் சந்தித்து விட்டு வரும்படி குஞ்சாச்சாவை அனுப்பி வைப்பேன். நான் யாரையும் பகையாளியாக கருதுவது இல்லை.

ஆனால் என்னை யாராவது எதிரியாக நினைத்தால் அதை கண்டு கொள்வது இல்லை. குடும்ப வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை மனைவி ஆஷா கற்று கொடுத்து இருக்கிறார். என்மீது அன்பு செலுத்துகிறார். அக்கறை செலுத்துகிறார். என்னை மட்டுமல்ல எனது அப்பா மற்றும் குழந்தைகளையும் நன்றாக பார்த்துக்கொள்கிறார்.

ஒரு மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிய வைத்துள்ளார். குஞ்சாச்சாவை தனது முதல் மகள் என்பார். எனது வாழ்க்கை இப்போது திருப்தியாக உள்ளது.” இவ்வாறு மனோஜ் கே.ஜெயன் கூறினார்.