சினிமா செய்திகள்

நடிகை மீது கண்ணாடி தம்ளரால் அடித்து தாக்குதல் + "||" + On the actress Attack by mirror mirror tumblr

நடிகை மீது கண்ணாடி தம்ளரால் அடித்து தாக்குதல்

நடிகை மீது கண்ணாடி தம்ளரால் அடித்து தாக்குதல்
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நளினி நேகி மீது பயங்கர தாக்குதல் நடந்துள்ளது.
கண்ணாடி தம்ளரால் முகத்தில் அடித்து காயப்படுத்தி உள்ளனர். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் குறித்து நளினி நேகி ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-


“நானும் பிரீத்தி என்ற பெண்ணும் சில வருடங்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே வீட்டில் தங்கி இருந்தோம். சில நாட்களுக்கு பிறகு அங்கிருந்து வெளியேறி தனியாக வீடு பார்த்து தங்கினேன். பிரீத்தி சமீபத்தில் வீடு வாடகைக்கு பார்க்கிறேன். அதுவரை உன்னுடன் தங்கிக்கொள்கிறேன் என்றார். நான் தங்கி இருந்த வீடு 2 படுக்கை அறை கொண்டது என்பதால் சம்மதித்தேன்.

சில நாட்கள் கழித்து பிரீத்தியின் அம்மாவும் அதே வீட்டில் வந்து தங்கினார். இதனால் ஊரில் இருந்து எனது பெற்றோர்கள் வருகிறார்கள். எனவே வேறு வீட்டுக்கு செல்லுங்கள் என்றேன். திடீரென்று பிரீத்தியும், அவரது அம்மாவும் என்னை மோசமான வார்த்தைகளால் திட்டி சண்டைக்கு வந்தனர்.

பிரீத்தி அம்மா கண்ணாடி தம்ளரால் என் முகத்தில் அடித்தார். இருவரும் என்னை குரூரமாக தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.