சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சமந்தாவை விமர்சித்த ரசிகர்கள் + "||" + Fans who criticized Samantha for posting sexy photos

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சமந்தாவை விமர்சித்த ரசிகர்கள்

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சமந்தாவை விமர்சித்த ரசிகர்கள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டதால், நடிகை சமந்தாவை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை மணந்து ஐதராபாத்தில் குடியேறிய சமந்தா திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. தமிழில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் படுக்கை அறையில் ஆபாசமாக நடித்து இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார்.


தற்போது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிடுவதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. நாக சைதன்யா மற்றும் மாமனார் நாகார்ஜுனா, மாமியார் நடிகை அமலா ஆகியோருடன் சமந்தா ஸ்பெயின் சென்றுள்ளார். அங்கு கடற்கரையிலும் நீச்சல் குளத்திலும் அரைகுறை உடையில் கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். நாகார்ஜுனா தனது 60-வது பிறந்தநாளை ஸ்பெயினில் கொண்டாடினார். அந்த நிகழ்ச்சியிலும் கவர்ச்சி உடையில் பங்கேற்றார். இந்த படங்களை பார்த்து இணையதளவாசிகள் கொதிப்படைந்து சமந்தாவை கடுமையாக சாடி வருகிறார்கள்.

“வெளிநாடு சென்றாலே உங்கள் உடம்பில் உடையே நிற்பதில்லை. தமிழ்நாட்டு கலாசாரத்தை காற்றில் பறக்க விடுகிறீர்களே? திருமணமான நடிகைகள் எப்படி உடை அணியவேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள். கவர்ச்சி படங்களை வெட்கமில்லாமல் வலைத்தளத்தில் வெளியிடுகிறீர்களே? உங்களுக்கு திருமணம் ஆனதே மறந்து விட்டதா? ஆடையை குறைத்து சுதந்திரத்தை காட்ட வேண்டாம்” என்றெல்லாம் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

சமந்தாவுக்கு ஆதரவாகவும் பலர் பேசி உள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வெப் தொடர்களில் தமன்னா, சமந்தா
அனைத்து இந்திய மொழி திரைப்படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள்.
2. வில்லிகளாக மாறிய சாய்பல்லவி, சமந்தா
காதல், டூயட் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை நடிகைகள் தேட ஆரம்பித்துள்ளனர்.
3. நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
கதாநாயகர்களுக்கு மட்டுமே ரசிகர் பட்டாளமும், ரசிகர் மன்றங்களும் இருக்கும் என்ற நிலை மாறி சமீப காலமாக கதாநாயகிகளுக்கும் ரசிகர்கள் படை திரள்கிறது. அவர்கள் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் அமோகமாக ஓடுகின்றன.
4. தயாரிப்பாளராகும் சமந்தா
நடிகை சமந்தா விரைவில் தயாரிப்பாளராக உள்ளார்.