சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்களை விமர்சித்த தனுசுக்கு வலுக்கும் எதிர்ப்புகள் + "||" + Criticizing the producers Opposition mounts for Dhanush

தயாரிப்பாளர்களை விமர்சித்த தனுசுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

தயாரிப்பாளர்களை விமர்சித்த தனுசுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்
தயாரிப்பாளர்களை விமர்சித்த நடிகர் தனுசுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

நடிகர் தனுஷ் சமீபத்தில் சென்னையில் நடந்த பட விழாவில் பேசும்போது, “இந்த காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அது பெரிய வேலையாக இருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்” என்றார்.

இது சர்ச்சையாகி உள்ளது. தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் கூறும்போது, “விஜய், அஜித்குமார் போன்றவர்கள் தயாரிப்பாளர்களுக்கு உதவுகிறார்கள். தனுசால் யாரும் லாபம் அடையவில்லை. துள்ளுவதோ இளமை தொடங்கி வடசென்னை வரை தனுசை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் இப்போது சினிமா துறையில் இல்லை” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியதாவது:-

“தனுசை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து உள்ளனர். கடன் வாங்கித்தான் பட அதிபர்கள் படம் எடுக்கின்றனர். கதாநாயகன் மற்றும் டைரக்டர் செய்யும் தவறுகளால் படப்பிடிப்பு காலதாமதமாகி வட்டி அதிமாகி விடுகிறது. ரூ.10 கோடிக்கு எடுத்த படத்தை ரூ.8 கோடிக்குத்தான் விற்க முடிகிறது. இதனால் வீடு சொத்துகளை இழந்து நிற்கிறார்கள்.

ஆனால் தனுஷ் போன்ற நடிகர்கள் ஆடம்பர கார்களில் வருகிறார்கள். தயாரிப்பாளர்கள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் என்று சில நடிகர்கள் சொந்தமாக படம் எடுத்து நஷ்டமடைந்த நிலைமையும் இருக்கிறது. எனவே தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டுவதை தனுஷ் நிறுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில தயாரிப்பாளர்கள் தனுசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக்கை உருவாக்கி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. வேட்டி-சட்டையில், தனுஷ்!
விழாக்களில் தனுஷ் வேட்டி-சட்டை அணிந்து கலந்து கொள்கிறார்.
2. ‘தீய சக்தி’ குறித்து பிரக்யா சிங் தாக்கூர் கூறிய கருத்து: காங்கிரஸ் தலைவர் விமர்சனம்
பா.ஜ.கவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துவதாக அக்கட்சியின் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் கூறியதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
3. சிறந்த நடிகர்-நடிகை தனுஷ், திரிஷாவுக்கு ‘சைமா’ விருது மோகன்லால் வழங்கினார்
சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் ‘பான்டலுன்ஸ் சைமா’ விருதுகள் வழங்கும் விழா கத்தாரில் நடந்தது.
4. 36 வயதில், தனுஷ்!
நடிகர் தனுஷ் கடந்த மாதம் தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
5. செல்வராகவன் டைரக்‌ஷனில், தனுஷ்!
செல்வராகவன் டைரக்‌ஷனில் தனுஷ் நடித்த `காதல் கொண்டேன்,’ `புதுப்பேட்டை,’ `மயக்கம் என்ன’ ஆகிய மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.