சினிமா செய்திகள்

‘சாஹோ’ படக்குழு மீது பிரெஞ்சு இயக்குனர் புகார் + "||" + French director complains to Sahoo movie team

‘சாஹோ’ படக்குழு மீது பிரெஞ்சு இயக்குனர் புகார்

‘சாஹோ’ படக்குழு மீது பிரெஞ்சு இயக்குனர் புகார்
சமீப காலமாக சினிமாவில் கதை திருட்டுக்கள் அதிகம் நடப்பதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. கோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
பிரெஞ்சு இயக்குனர் ஜெரோம் சல்லி தனது கதையை திருடி ‘சாஹோ’ படத்தை எடுத்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த படத்தில் பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர், அருண்விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. உலக அளவில் 4 நாட்களில் ரூ.350 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது.

இந்த படம் திரைக்கு வந்ததும் ஜெரோம் சல்லி தனது டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு இந்தியாவில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது” என்று பதிவிட்டார். அதன் அர்த்தம் புரியவில்லை என்று ரசிகர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து மீண்டும் டுவிட்டர் பக்கத்தில், “நான் இயக்கிய ‘லார்கோ வின்ச்’ படத்தை தழுவி எடுத்துள்ளனர். ஆனால் படம் மோசமாக உள்ளது. தயவு செய்து என் கதையை திருடினால் ஒழுங்காக திருடுங்கள்” என்று கூறியுள்ளார். ஜெரோம் சல்லி இயக்கிய லார்கோ வின்ச் படம் 2008-ல் பிரெஞ்சு மொழியில் வெளியானது. ஏற்கனவே கடந்த ஆண்டு பவன் கல்யாண் இயக்கத்தில் வெளியான அஞ்ஞாதவாசி படமும் தனது கதை என்று ஜெரோம் சல்லி கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வியக்க வைத்த தெலுங்கு நாயகன்!
‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 பிரமாண்டமான படங்களில் கதாநாயகனாக நடித்தவர், தெலுங்கு நாயகன் பிரபாஸ். இந்த 2 படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தெலுங்கு பட உலகில் பிரபாசின் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்தது. இந்த சூடு குறைவதற்குள் அவர், ‘சாஹோ’ என்ற மற்றொரு பிரமாண்டமான படத்தில் நடித்தார்.
2. ரூ.70 கோடியில், ஒரு சண்டை காட்சி!
‘பாகுபலி’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், பிரபாஸ்.
3. பிரபாஸ் பற்றி புகழ்ந்து பேசுகிறார்!
பிரபாஸ் பற்றி தமன்னா புகழ்ந்து பேசுகிறாராம்.