சினிமா செய்திகள்

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திரிஷா ? + "||" + Trisha in Ponni's 'Selvan' movie

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திரிஷா ?

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திரிஷா ?
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகர்-நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.
வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும். நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று ஐஸ்வர்யாராய் கூறியுள்ளார். ஜெயராமும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார்.

என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் திரிஷாவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வனில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பட்டியலை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திரிஷா ஆசை நிறைவேறியது!
தமிழ், தெலுங்கு சினிமாவில் 20 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கும் திரிஷாவுக்கு மூன்றே மூன்று நீண்ட கால ஆசைகள் இருந்தன.