சினிமா செய்திகள்

காப்பான், அசுரன், ஆக்‌ஷன்: தீபாவளிக்கு முன்பு திரைக்கு வரும் 10 படங்கள் + "||" + kaappaan, Asuran, Action : Top 10 Movies To Die Before Diwali

காப்பான், அசுரன், ஆக்‌ஷன்: தீபாவளிக்கு முன்பு திரைக்கு வரும் 10 படங்கள்

காப்பான், அசுரன், ஆக்‌ஷன்: தீபாவளிக்கு முன்பு திரைக்கு வரும் 10 படங்கள்
விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய 2 படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தீபாவளிக்கு முன்பு 10 பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்யாவின் மகாமுனி, தனுசின் எனை நோக்கி பாயும் தோட்டா, யோகிபாபுவின் ஜாம்பி ஆகிய 3 படங்களும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது.

மகாமுனியில் ஆர்யா 2 வேடங்களில் நடித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகி உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா பண பிரச்சினையில் சிக்கி நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகிறது. ஜாம்பி ரத்த காட்டேறிகளை பற்றிய நகைச்சுவை படம். சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் வருகிற 13-ந்தேதி திரைக்கு வருகிறது.

சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயிஷா ஆகியோர் நடித்துள்ள காப்பான் படம் 20-ந்தேதி வெளியாகிறது. கே.வி.ஆனந்த் இயக்கி உள்ள இந்த படத்தில் சூர்யா அதிரடிப்படை போலீஸ் அதிகாரியாக வருகிறார். சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை 27-ந்தேதி வெளியாகிறது.

விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், தனுசின் அசுரன், ஜி.வி.பிரகாசின் 100 பர்சன்ட் காதல் ஆகிய படங்களை அடுத்த மாதம் 4-ந்தேதியும், விஷால் நடித்துள்ள ஆக்‌ஷன் படத்தை 10-ந்தேதியும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தனுசின் ‘அசுரன்’ சீன மொழியில் ‘ரீமேக்’
தனுசின் ‘அசுரன்’ சீன மொழியில் ‘ரீமேக்’ செய்யப்பட உள்ளது.