சினிமா செய்திகள்

வைரலாகும் புகைப்படம்: உடல் எடை கூடிய அனுஷ்கா + "||" + The photo is virat; Anushka weight is increased

வைரலாகும் புகைப்படம்: உடல் எடை கூடிய அனுஷ்கா

வைரலாகும் புகைப்படம்: உடல் எடை கூடிய அனுஷ்கா
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகியோருடன் நடித்துள்ளார்.
அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அனுஷ்காவின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தின.

கடைசியாக அனுஷ்கா நடிப்பில் பாகுமதி படம் வந்தது. அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லை. உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருந்ததால் அனுஷ்காவை ஒதுக்கினர். இதனால் கடும் உடற்பயிற்சிகள் செய்து எடை குறைந்து ஒல்லியான தோற்ற புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அதன்பிறகு நிசப்தம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். 4 இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம் என்று அனுஷ்கா கூறி இருந்தார். இந்த நிலையில் அனுஷ்கா ஐதராபாத் விமான நிலையத்துக்கு வந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மீண்டும் உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருக்கிறார். உடற்பயிற்சிகளால் எடையை குறைக்க முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 4 மொழிகளில், அனுஷ்கா படம்!
அனுஷ்கா கஷ்டப்பட்டு உடலை மெலிய வைத்த பின் நடித்து இருக்கும் படம்‘நிசப்தம்’.