சினிமா செய்திகள்

நிவேதா தாமசை கவர்ந்த ரஜினி ஸ்டைல் + "||" + Rajini Style is attracting on Nivetha Thomas

நிவேதா தாமசை கவர்ந்த ரஜினி ஸ்டைல்

நிவேதா தாமசை கவர்ந்த ரஜினி ஸ்டைல்
தமிழில் குருவி, ஜில்லா, பாபநாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ் இப்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“எனக்கு பத்மாவத், தனு வெட்ஸ் மனு படங்களில் நடித்த முறையே தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத் மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை உள்ளது. நான் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகை. எங்கு பயணம் போனாலும் ஏ.ஆர்.ரகுமான் இசையை கேட்டுக்கொண்டே செல்வேன். அவரது பாடல்களை கேட்டாலே புதிய சக்தி கிடைத்தது போல் தோன்றும்.

எனக்கு சமையல் நன்றாக வரும். மழை வந்தால் பால்கனியில் நின்று கொண்டு மசாலா டீ குடிப்பது பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஸ்ரீதேவி. சிறு வயதில் இருந்தே டி.வியில் ரஜினிகாந்த் படங்கள் வந்தால் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பேன். அவர் சிகரெட்டை தூக்கி போட்டு பிடிக்கும் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

கமல்ஹாசன் நடிப்பும் பிடிக்கும். அவ்வப்போது பைக்கை எடுத்துக்கொண்டு இரவில் சுற்றி வருவேன். ஹெல்மெட் போட்டு இருப்பதால் யாரும் என்னை கண்டுபிடிக்க முடியாது. கமல்ஹாசன், சரிதா நடித்த மரோசரித்திரா எனக்கு பிடித்த படம். பல நூறு தடவை பார்த்து இருக்கிறேன். பேட்மிண்டன் விளையாடுவதுதான் எனது அழகின் ரகசியம். எனக்கு பிடித்த சுற்றுலா இடம் பிரேசில் மற்றும் ரோம். நேரம் கிடைத்தால் குடும்பத்தோடு அங்கே போய்விடுவேன்.”

இவ்வாறு நிவேதா தாமஸ் கூறினார்.