சினிமா செய்திகள்

பாடகர்களுக்கு லதா மங்கேஷ்கர் அறிவுரை + "||" + Lata Mangeshkar advises singers

பாடகர்களுக்கு லதா மங்கேஷ்கர் அறிவுரை

பாடகர்களுக்கு லதா மங்கேஷ்கர் அறிவுரை
மும்பை ரெயில் நிலையத்தில் பாடகி லதா மங்கேஷ்கர் பாடலை பாடி பிச்சை எடுத்த ரானு மண்டல் என்ற பெண் சமூக வலைத்தளத்தில் வைரலானார். இதையடுத்து அவருக்கு இந்தி படங்களில் பாட வாய்ப்புகள் வந்துள்ளன.
லதா மங்கேஷ்கர் இதுகுறித்து கூறியதாவது:- “என்னைப் போல் ஒருவர் பாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் மற்றவர்கள் குரலை காப்பி அடிக்க கூடாது. தங்களுக்கு உள்ள சொந்த குரலை அடையாளம் கண்டுபிடித்து அதன்படி பாட வேண்டும். அதுவே அவர்களை தனித்தன்மையுடன் நிலை நிறுத்தும்.

நான் பல இசை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்கிறேன். அதில் கலந்து கொள்ளும் குழந்தைகள் என்னைப் போலவே பாடுகிறார்கள். அதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி மேடையில் பாடியவர்களில் இப்போது ஸ்ரேயா கோஷலும், சுனிதி சவுகானும் பிரபல பாடகர்களாக மாறி உள்ளார்கள்.

எனது குரலிலும் மற்ற பிரபலமான பாடகர்கள் குரலிலும் பாடுகிறவர்கள் தங்கள் குரலை அடையாளம் கண்டு அதன்படி பாடினால்தான் வாய்ப்புகள் வரும். எனது தங்கை ஆஷா என்னை பின்பற்றி எனது குரலிலேயே பாடி இருந்தால், புகழ் அடைந்து இருக்க முடியாது. தனக்கென்று தனிகுரலை உருவாக்கி பிரபலமாகி இருக்கிறார்.”

இவ்வாறு லதா மங்கேஷ்கர் கூறினார்.