சினிமா செய்திகள்

தணிக்கை குழு தடை: ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்துக்கு சிக்கல் + "||" + Censorborad Committee ban: Problem in Jeeva's Gypsy movie

தணிக்கை குழு தடை: ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்துக்கு சிக்கல்

தணிக்கை குழு தடை: ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்துக்கு சிக்கல்
ஜீவா நடித்துள்ள ‘ஜிப்ஸி’ படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த படத்தை குக்கூ, ஜோக்கர் படங்களை எடுத்து பிரபலமான ராஜூமுருகன் இயக்கி உள்ளார்.
நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர். இதனால் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டு அங்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து மும்பையில் உள்ள தணிக்கை தீர்ப்பாயத்துக்கு படத்தை கொண்டு செல்கிறார்கள்.

அங்கு அனுமதி கிடைக்குமா? என்பது தெரியவில்லை. ஜிப்ஸி படத்தில் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் அதனால் தான் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை கேலி செய்வது போன்ற காட்சிகளும் உள்ளன.

நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஜிப்ஸி திரைப்படத்தில் என்ன பிரச்சினை. இருமுறை தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டு டிரிபியூனல் செல்ல அறிவுறுத்தப்பட்டதா? ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை கேவலப்படுத்தும் காட்சிகளும், முதல்வர் யோகி கெட்டப் போட்டு அவர் பெயரை பயன்படுத்தியதும், இந்து கலவர காட்சிகளும் காரணமா? தயாரிப்பாளர் தி.மு.க.வா?” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தணிக்கை தீர்ப்பாயம் அனுமதி - ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்துக்கு தடை நீங்கியது
குக்கூ, ஜோக்கர் படங்களை எடுத்து பிரபலமான ராஜூ முருகன் இயக்கிய ‘ஜிப்ஸி’ படத்தில் ஜீவா நடித்துள்ளார்.