சினிமா செய்திகள்

நயன்தாரா படத்தில் ஹாலிவுட் நடிகர் + "||" + Hollywood actor in Nayanthara Movie

நயன்தாரா படத்தில் ஹாலிவுட் நடிகர்

நயன்தாரா படத்தில் ஹாலிவுட் நடிகர்
நயன்தாராவுக்கு இந்த வருடம் ஆரம்பத்தில் திரைக்கு வந்த விஸ்வாசம் படத்தின் வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. சம்பளத்தையும் ரூ.5 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு வெளியான ஐரா, கொலையுதிர் காலம், மிஸ்டர் லோக்கல் படங்கள் எதிர்பார்த்தபடி ஓடாமல் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தின.
ரஜினிகாந்த் ஜோடியாக தர்பார், விஜய்யுடன் பிகில் ஆகிய படங்களில் இப்போது நடித்து வருகிறார். பிகில் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள சைரா நரசிம்ம ரெட்டி என்ற சரித்திர படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறார். இதன் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

இந்த நிலையில் மணிரத்னம் உதவியாளரும் ‘அவள்’ என்ற பேய் படத்தை இயக்கி பிரபலமானவருமான மிலிந்த் ராவ் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். அவள் படத்தை போலவே இதுவும் திகில் கதையம்சத்தில் தயாராகிறது. இதில் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது.

இந்த படத்தை நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். படப்பிடிப்பை இந்த மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். நயன்தாராவுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்தி நடிகர் லியூக் கென்னியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ‘ஸ்கேர்டு கேம்ஸ்’ என்ற வெப் தொடரில் நடித்தவர். ஹாலிவுட் படம் மற்றும் ஆங்கில இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. “சினிமாவில் நான் செய்த பெரிய தவறு” - நயன்தாரா
தமிழ் பட உலகில் நம்பர்-1 நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.4 கோடி வாங்குகிறார்.
2. திருப்பதியில் என்ன வேண்டுதல்?
நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சமீபத்தில் திருப்பதி சென்று வந்தார்கள்.
3. போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா?
தென்னிந்திய பட உலகில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம் ஆகிய தமிழ் படங்களும் லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற மலையாள படமும் சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படமும் திரைக்கு வந்தன.
4. நயன்தாராவும், ரூ.10 கோடியும்!
பிரபல துணிக்கடை அதிபர், ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் சண்டை பயிற்சி, நடன பயிற்சி ஆகியவைகளை கற்று வருகிறார்.
5. ரூ.50 கோடி வசூல் செய்த படம்!
தென்னிந்திய கதாநாயகிகளில், ‘நம்பர்-1’ ஆக இருப்பவர், நயன்தாரா. ரூ.6 கோடி சம்பளம் வாங்கி வரும் ஒரே தென்னிந்திய நடிகை இவர்தான்.