சினிமா செய்திகள்

ரசிகர்களை சந்தித்த சூர்யா + "||" + Surya who met the fans

ரசிகர்களை சந்தித்த சூர்யா

ரசிகர்களை சந்தித்த சூர்யா
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படம் திரைக்கு வர உள்ளது. இதில் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக வருகிறார். படத்தின் டிரெய்லரில் “ஒரு உயிரை பலி கொடுத்து 100 உயிரை காப்பாற்றுவது தப்பில்லை. அது பாவமும் இல்லை” என்ற வசனமும் சூர்யாவின் அதிரடி சண்டை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இறுதி சுற்று படம் மூலம் பிரபலமான சுதா கொங்கரா இயக்கும் ‘சூரரைப்போற்று’ படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நாயகியாக வருகிறார். ஜாக்கி ஷெராப், கருணாஸ், மோகன் பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மதுரையை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

மதுரைக்கு சூர்யா வந்ததை அறிந்த ரசிகர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அவரை காண தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர். சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகளை சூர்யா சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று ஒரு தனியார் அரங்கில் ரசிகர்களை சூர்யா சந்தித்தார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

ரசிகர்கள் மத்தியில் சூர்யா பேசும்போது, “பிதாமகனுக்கு பிறகு உங்களை சந்தித்திருக்கிறேன். குறைந்த கால அவகாசத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது ஆனாலும் 800-க்கும் மேற்பட்டவர்கள் வந்தது மகிழ்ச்சி. அடுத்தமுறை உங்கள் அனைவரையும் குடும்பத்துடன் சந்திக்கிறேன். சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ளது. இது ஒரு புதிய முயற்சி, உங்களை மகிழ்விக்கும்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் உதவி
‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்தனர்.
2. ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்!
திறமையான நடிகர்கள் மற்றும் சிறந்த டைரக்டர்களை அழைத்து, அவர்களை மனம் திறந்து பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார், சூர்யா.
3. சர்ச்சையில் சூர்யாவின் ‘அருவா’ தலைப்பு
சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
4. தீபாவளி விருந்தாக சூர்யா-ஹரி இணையும் 6-வது படம், `அருவா’
சூர்யா-ஹரி இணைந்து பணிபுரியும் 6-வது படத்துக்கு, `அருவா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
5. படமாகும் குறுநாவலில், சூர்யா!
சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இதையடுத்து சூர்யா நடிக்கப்போகும் படம் எது, அந்த படத்தை இயக்கப் போகிறவர் யார்? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தன. இந்த கேள்விகளுக்கு இப்போது விடை கிடைத்து இருக்கிறது.