சினிமா செய்திகள்

தனுஷ் படம் மீண்டும் தள்ளிவைப்பு? + "||" + Dhanush's movie is postponed again?

தனுஷ் படம் மீண்டும் தள்ளிவைப்பு?

தனுஷ் படம் மீண்டும் தள்ளிவைப்பு?
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா.’ இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
2016-ம் ஆண்டு படப்பிடிப்பை தொடங்கினர். பண நெருக்கடியால் அடிக்கடி தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒரு வழியாக படப்பிடிப்பை முடித்து திரைக்கு கொண்டு வர தயாரானபோது பைனான்ஸ் கொடுத்தவர்கள் நெருக்கடியால் நின்று போனது. 3 வருடங்களாக படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். படத்தை திரைக்கு கொண்டுவர பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடந்தும் தீர்வு ஏற்படாமல் இருந்தது.

பாடல்கள் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் இன்று வெளியாகும் என்று படக் குழுவினர் அறிவித்தனர். இது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. பேனர் கட் அவுட்கள் அமைத்து படத்தை வரவேற்க தயாரானார்கள்.

ஆனால் படம் திட்டமிட்டபடி இன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மீண்டும் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. நாளை அல்லது 12-ந்தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண பிரச்சினையை எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் மூலம் தீர்ப்பதாக கவுதம் மேனன் ஏற்கனவே உறுதி அளித்துள்ளதாக கூறப்பட்டது. ஆனாலும் படம் இன்று வெளியாவதில் தடங்கல் ஏற்பட்டு உள்ளது. இது தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர்!
தனுஷ் படத்துக்கு படம் வித்தியாசமான கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மாறுபட்ட வேடங்களில் நடிப்பதை அவர் சவாலாக எடுத்துக் கொள்கிறார்.
2. தனுசுடன் நடிக்கும் ஹாலிவுட் நடிகர்!
தனுஷ் சிறந்த கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறார். தனது கதாபாத்திரம் நடிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக இருக்கிறதா? என்றும் பார்த்துக் கொள்கிறார்.
3. தனுசின் ‘பவர் பாண்டி’ 2-ம் பாகம்
தனுஷ் நடிப்பில் மாரி 2-ம் பாகம் படம் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். அடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.
4. 3 தோற்றங்களில், தனுஷ்!
வெற்றி மாறன் டைரக்‌ஷனில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அசுரன்’.
5. இரட்டை வேடங்களில், தனுஷ்!
தனுஷ் கை நிறைய படங்களை வைத்து இருக்கிறார். இருப்பினும், சிறந்த கதையம்சம் கொண்ட பட வாய்ப்பு வந்தால், அதை தவிர்ப்பதில்லை.