சினிமா செய்திகள்

நடிகை பார்வதி நம்பியார் நிச்சயதார்த்தம் + "||" + Actress Parvathi Nambiar is engaged

நடிகை பார்வதி நம்பியார் நிச்சயதார்த்தம்

நடிகை பார்வதி நம்பியார் நிச்சயதார்த்தம்
ஜெயப்பிரதா, ரேவதி நடித்து தமிழில் வெளியான ‘கேணி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தவர் பார்வதி நம்பியார். மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘மதுர ராஜா,’ ‘புதன் பணம்,’ பிஜுமேனனுடன் ‘லீலா,’ திலீப்புடன் ‘ஏழு சுந்தர ராத்திரிகள்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார்.
பார்வதி நம்பியாருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. வினித் மேனன் என்பவரை மணக்கிறார். பார்வதி நம்பியார்-வினித் மேனன் திருமண நிச்சயதார்த்தம் கேரள மாநிலம் கொச்சியில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

நிச்சயதார்த்த புகைப்படத்தை பார்வதி நம்பியார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். திருமணம் எப்போது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.