சினிமா செய்திகள்

சினிமாவில் போட்ட பணத்தை எடுக்க வேண்டும்; பட அதிபர்களுக்கு ஆதரவாக பேசிய ரகுல்பிரீத் சிங் + "||" + Rakul preet Singh, speaking in favor of the film producers

சினிமாவில் போட்ட பணத்தை எடுக்க வேண்டும்; பட அதிபர்களுக்கு ஆதரவாக பேசிய ரகுல்பிரீத் சிங்

சினிமாவில் போட்ட பணத்தை எடுக்க வேண்டும்; பட அதிபர்களுக்கு ஆதரவாக பேசிய ரகுல்பிரீத் சிங்
சிவகார்த்திகேயன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார் ரகுல்பிரீத் சிங். இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:-
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க பிடிக்கும். ஆனால் அதற்காக காத்திருப்பதிலும் வர்த்தக ரீதியிலான படங்க ளில் நடிக்க மறுப்பதிலும் எனக்கு உடன் பாடு இல்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் நடிகைகளை சுற்றியே இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

நான் ஏற்கனவே நடித்த சில படங்களில் கதாநாயகர்கள் இருந்தாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகவே இருந்தன. இந்த படங்களை முதலீடு போட்டால் கண்டிப்பாக திரும்ப வந்து விடும் என்ற நம்பிக்கையோடு தயாரிப்பாளர்கள் எடுத்தனர். தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்தால்தான் மீண்டும் அவர்களால் படங்கள் எடுக்க முடியும்.

விருது படங்கள் வர்த்தக ரீதியாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிலைமை உள்ளது. எனக்கும் விருது வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் இப்போதே நடித்துவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது சினிமா வாழ்க்கை இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நேரம் வரும்போது விருது படங்களில் நடிப்பேன். இப்போது சினிமாவில் நான் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.”

இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.