சினிமா செய்திகள்

‘இந்தியன் - 2’ படப்பிடிப்பில் கமல்ஹாசன் + "||" + In Indian - 2 shooting Kamal

‘இந்தியன் - 2’ படப்பிடிப்பில் கமல்ஹாசன்

‘இந்தியன் - 2’ படப்பிடிப்பில் கமல்ஹாசன்
கமல்ஹாசன் நடித்து 1996-ல் திரைக்கு வந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியன்-2 என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் படமாக்கி வருகிறார்.
 இதில் கமல்ஹாசனின் வயதான சேனாதிபதி தோற்றத்தில் வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து மாற்றம் செய்துள்ளனர்.

கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர். வித்யூத் ஜமால் வில்லனாக வருகிறார். இதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் தொடங்கியது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தை ரகுல் பிரீத் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.


கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வேலையில் இருந்ததால் இந்தியன்-2 படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்து கொள்ளவில்லை. அவரை தவிர்த்து மற்ற நடிகர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினர். தற்போது கமல்ஹாசனும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள சிறிய ஓட்டல் ஒன்றிலும் படப்பிடிப்பை நடத்தினர். சேனாதிபதியாக வரும் கமல்ஹாசன் அந்த ஓட்டலுக்கு நடந்து செல்வது போன்ற காட்சியை படமாக்கினர். தொடர்ந்து சில வாரங்கள் சென்னையில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. அதன்பிறகு கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் வெளிநாடு செல்கிறார்கள். வெளிநாட்டில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்தும் - கமல்ஹாசனும் இணைந்து போட்டியிட திட்டமா?
வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்தும் - கமல்ஹாசனும் இணைந்து போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
2. கமல் விழாவில் விஜய் அரசியல் நுழைவை சூசகமாக குறிப்பிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்
"ஆண்டது போதுமென நினைத்த பிறகு, தம்பிகளுக்கு வழிவிடுங்கள்" என விஜய் அரசியல் நுழைவை மறைமுகமாக எஸ்.ஏ.சந்திரசேகர் கூறி உள்ளார்.
3. தாமதமான கவுரவம் என்றாலும் தக்க கவுரவம் தான்- ரஜினி குறித்து கமல்ஹாசன் பேச்சு
இயக்குனர் பாலச்சந்தரின் சிலையை திறந்து வைத்த பின்னர் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
4. கமல் அரசியலுக்கு வந்தாலும் கலையை கைவிடமாட்டார் -நடிகர் ரஜினிகாந்த்
அரசியலுக்கு வந்தாலும், தாய்வீடான சினிமாவை கமல்ஹாசன் மறக்கமாட்டார் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
5. ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது: கமல்ஹாசன் வாழ்த்து
சிறப்பு விருது பெற உள்ள நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.