சினிமா செய்திகள்

ரூ.10 லட்சத்தை தர மறுப்பு நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார் + "||" + Rs 10 Lakh Refusal Actor Prakashraj complains

ரூ.10 லட்சத்தை தர மறுப்பு நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார்

ரூ.10 லட்சத்தை தர மறுப்பு நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார்
‘புளுவேல்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் பூர்ணா, மாஸ்டர் கபிஷ் கண்ணா, பிர்லா போஸ், பொன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரங்கநாதன் இயக்கி உள்ளார்.
புளுவேல் விளையாட்டை மையமாக வைத்து ‘புளுவேல்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் பூர்ணா, மாஸ்டர் கபிஷ் கண்ணா, பிர்லா போஸ், பொன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரங்கநாதன் இயக்கி உள்ளார். மது, அருமைச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.


இதில் தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்து கொண்டு பேசும்போது, “இயக்குனர் நினைத்தால் சாதாரண மனிதரையும் சூப்பர் ஸ்டாராக்க முடியும், சூப்பர் ஸ்டாரை சாதாரண மனிதராக்க முடியும். சிலர் உங்கள் படம் நன்றாக ஓடுகிறது என்று உசுப்பேத்துவதை நம்பி நடிகர்-நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவது வருத்தம் அளிக்கிறது.

புளூவேல் விளையாட்டைப் பற்றியும், அதை விளையாடுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சமூக அக்கறையோடு இப்படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்” என்றார். தயாரிப்பாளர் சங்க கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “பிரகாஷ் ராஜ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நடிக்க நேரமில்லை என்று கூறிவிட்டார். ரூ.15 லட்சம் முன்பணத்தில் ரூ.5 லட்சம் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தைத் திருப்பிதர மறுக்கிறார். அவர் எந்த படப்பிடிப்பில் இருந்தாலும் மறியல் நடத்துவோம்” என்றார்

நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை பூர்ணா, டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தாமிரா, தயாரிப்பாளர் டி.சிவா, கவிஞர் ரவிபாரதி உள்ளிட்ட பலர் பேசினார்கள்.