சினிமா செய்திகள்

நடிகை ஸ்ரத்தா கபூரின் பேய் அனுபவம் + "||" + Actress Shratha Kapoor Ghost experience

நடிகை ஸ்ரத்தா கபூரின் பேய் அனுபவம்

நடிகை ஸ்ரத்தா கபூரின் பேய் அனுபவம்
தமிழ், தெலுங்கில் வெளியான சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா கபூர். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
“இயற்கை அழகு என்பது நல்ல தூக்கம். தன்னை தானே மறந்து தூங்குபவர்களை பார்த்தால் பிடிக்கும். சரியான தூக்கம் இல்லை என்றால் எவ்வளவு கஷ்டப்பட்டும் பிரயோஜனம் இல்லை. சரியான தூக்கமும் அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கமும் ஆரோக்கித்தையும் அழகையும் தரும்.


மேக்கப்பால்தான் அழகு வரும் என்பதை நம்ப மாட்டேன். மேக்கப் இல்லை என்றால்தான் சவுகரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். மன அழுத்தம் எல்லோரையும் தாக்குகிறது. அதில் இருந்து விடபட ஓய்வு இல்லாமல் வேலை செய்ய வேண்டும். செய்கிற தொழிலில் அக்கறையும் நேசிப்பும் இருந்தால் மன அழுத்தம் அறவே இருக்காது.

படத்தின் வெற்றி தோல்வியை கண்டு கொள்வது இல்லை. 50 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் தோல்விகள் வரும். வெற்றி, தோல்வி ரசிகர்கள் கையில் உள்ளது. பேய் படங்கள் அதிகம் பார்ப்பேன். ஒரு தடவை படப்பிடிப்பில் உயரத்தில் இருந்து கிழே விழுந்த ஒருவர் என்னை யாரோ தள்ளிய மாதிரி இருந்தது என்றார். பேய் தள்ளி இருக்குமோ என்று இப்போதும் யோசிக்கிறேன். நமக்கு தெரியாத சக்திகள் நிறைய இருக்கின்றன என்பதை நம்புகிறேன்.” இவ்வாறு ஸ்ரத்தா கபூர் கூறினார்.