சினிமா செய்திகள்

திரிஷா கைவசம் 7 படங்கள் + "||" + Actress Trisha in 7 films

திரிஷா கைவசம் 7 படங்கள்

திரிஷா கைவசம் 7 படங்கள்
திரிஷா 2002-ல் கதாநாயகியாக அறிமுகமாகி 36 வயது நிரம்பிய நிலையிலும் இன்னும் கதாநாயகியாகவே நீடிக்கிறார்.
கடந்த வருடம் திரைக்கு வந்த ‘96’ படத்தின் வெற்றி அவரை மேலும் உச்சத்துக்கு கொண்டு போனது. இந்த படத்தை தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்கின்றனர்.

ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவும் இந்த வருடம் திரைக்கு வந்த ‘பேட்ட’ படத்தில் நிறைவேறியது. கர்ஜனை, சதுரங்க வேட்டை-2 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார். இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.


ராங்கி படம் ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதையில் உருவாகிறது. சுகர் படத்தில் சிம்ரனும் இணைந்து நடிக்கிறார். அடுத்து மலையாள படமொன்றில் மோகன்லால் ஜோடியாக நடிக்க திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.

மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஜீத்து ஜோசப் தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்தை டைரக்டு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக ஹே ஜூட் என்ற படத்தில் திரிஷா நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.