சினிமா செய்திகள்

பிரியங்கா சோப்ராவை திட்டிய இயக்குனர்கள் + "||" + Priyanka Chopra Scolding directors

பிரியங்கா சோப்ராவை திட்டிய இயக்குனர்கள்

பிரியங்கா சோப்ராவை திட்டிய இயக்குனர்கள்
உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவுக்கு முதன் முதலாக தமிழ் படத்தில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது.
அதன்பிறகு இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்தன. அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு விமர்சனங்களிலும் சிக்கினார். குடும்பத்தினருடன் புகைப்பிடிக்கும் படம் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க கூடாது என்றும் தனக்கு ஆஸ்துமா உள்ளது என்றும் பேசிவரும் பிரியங்கா சோப்ரா இப்படி புகைப்பிடிக்கலாமா? என்று வலைத்தள வாசிகள் கண்டித்தனர். இந்த நிலையில் தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை குறித்து பிரியங்கா சோப்ரா வெளிப்படையாக பேசி உள்ளார். அவர் கூறியதாவது:-


“நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் மிகவும் கஷ்டப்பட்டேன். பட வாய்ப்புக்காக அலைக்கழித்தனர். அப்போது சினிமாவில் எனக்கு யாரையும் தெரியாது. சினிமா பற்றிய புரிதலும் இல்லை. இயக்குனர்கள் என்மீது கோபப்படுவார்கள். திட்டவும் செய்வார்கள். என்னை ஒதுக்கினர். சினிமாவில் இருந்து தூக்கி எறிந்தனர்.

அந்த துயரமான நாட்களில் எனது தந்தை ஆதரவாக இருந்தார். தோல்விகளை நாம் எப்படி கையாள் கிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. என்னை நானே ஊக்கப்படுத்தி முன்னேறி னேன்.” இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...