சினிமா செய்திகள்

சீமான்-ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடிக்கும் படம் + "||" + Seeman-RK Suresh co-starring

சீமான்-ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடிக்கும் படம்

சீமான்-ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடிக்கும் படம்
சீமான், ஆர்.கே.சுரேஷ் ஆகிய இருவரும் ‘அமீரா’ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
சீமான், ஆர்.கே.சுரேஷ் ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு, ‘அமீரா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். மலையாள நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சீமானிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரா.சுப்பிரமணியன் டைரக்டு செய்கிறார்.

சர்வதேச படவிழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை குவித்த ‘டூ லெட்’ படத்தின் டைரக்டரும், ஒளிப்பதிவாளருமான செழியன், ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். தம்பி திரைக்களம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு சென்னை மற்றும் தென்காசியில் 40 நாட்கள் நடை பெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் நடைபெறுகிறது.