சினிமா செய்திகள்

கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும்‘சஸ்பென்ஸ்’ கதாபாத்திரத்தில், சாய் தன்சிகா! + "||" + Sai Tansika in Suspense Character

கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும்‘சஸ்பென்ஸ்’ கதாபாத்திரத்தில், சாய் தன்சிகா!

கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும்‘சஸ்பென்ஸ்’ கதாபாத்திரத்தில், சாய் தன்சிகா!
‘லாபம்’ படத்தில் சாய் தன்சிகா ஒரு ‘சஸ்பென்ஸ்’ ஆன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சமூக கருத்துகள் நிறைந்த கதைகளை ஜனரஞ்சகமான படமாக கொடுத்து வரும் டைரக்டர்களில், எஸ்.பி.ஜனநாதனும் ஒருவர். அவர் இயக்கிய ‘இயற்கை,’ ‘ஈ,’ ‘பேராண்மை,’ ‘புறம்போக்கு’ ஆகிய படங்களே இதற்கு உதாரணம். எஸ்.பி.ஜனநாதன் அடுத்து டைரக்டு செய்யும் ‘லாபம்’ படத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி, சுருதிஹாசன்.

இந்த படத்தில், சாய் தன்சிகா ஒரு ‘சஸ்பென்ஸ்’ ஆன கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரம், அது. அதில் நடிப்பது பற்றி சாய் தன்சிகா கூறியதாவது:-

“விவசாய மக்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை அழுத்தமாக பேசும் படம், இது. அன்று விவசாயிகளுக்கு எதிராக போடப்பட்ட விதை இன்று வரை எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக அற்புதமாக படம் பேசுகிறது.

இந்த படத்தில் என் கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. டைரக்டர் ஜனநாதன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது.”