சினிமா செய்திகள்

‘நிசப்தம்’ பட தோற்றம் வெளியானது - வாய் பேசாதவராக அனுஷ்கா + "||" + 'Silent' film was released Appearance - Anushka to be silent

‘நிசப்தம்’ பட தோற்றம் வெளியானது - வாய் பேசாதவராக அனுஷ்கா

‘நிசப்தம்’ பட தோற்றம் வெளியானது - வாய் பேசாதவராக அனுஷ்கா
வாய் பேசாதவராக நடிகை அனுஷ்கா நடிக்க உள்ள ‘நிசப்தம்’ பட தோற்றம் வெளியாகி உள்ளது.

அனுஷ்கா சினிமாவில் 14 வருடங்களாக கதாநாயகியாக நீடிக்கிறார். ஆரம்பத்தில் காதல் கதைகளில் வந்த அவர் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தார். பாகுபலி முக்கிய படமாக அமைந்தது. அந்த படத்துக்கு பிறகு அனுஷ்கா நடித்து திரைக்கு வந்த பாகமதி தோல்வி அடைந்தது.


உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலியில் பிரபலமான நடிகர் பிரபாசை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்க போவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ‘நிசப்தம்’ என்ற படத்தில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் வாய் பேசாத, காதுகேளாத பெண்ணாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. கதாநாயகனாக மாதவன் நடிக்கிறார். அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. பிரபல இந்தி டைரக்டர் ஹேமந்த் மதுகர் இயக்குகிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த நிலையில் நிசப்தம் படத்தில் அனுஷ்காவின் தோற்றத்தை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். அதில் அனுஷ்கா எடை குறைந்த தோற்றத்தில் ஓவியம் வரைவது போன்ற காட்சி உள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நிசப்தம் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.