சினிமா செய்திகள்

பெண்களை சமையல் கற்க சொல்வதா? - வித்யா பாலன் எதிர்ப்பு + "||" + Says women learn to cook? - Vidya Balan protest

பெண்களை சமையல் கற்க சொல்வதா? - வித்யா பாலன் எதிர்ப்பு

பெண்களை சமையல் கற்க சொல்வதா? - வித்யா பாலன் எதிர்ப்பு
பெண்களை சமையல் கற்க சொல்வதற்கு நடிகை வித்யா பாலன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகையான வித்யாபாலன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“எனக்கு சமைக்க வராது. சமையல் கற்றுக்கொள்ள ஆசையும் இல்லை. 2012-ல் தயாரிப்பாளர் சித்தார்த் ராய்கபூரை திருமணம் செய்தபோது இனிமேலாவது சமையல் கற்றுக்கொள் என்று எனது தாயார் கூறினார். ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்? இப்போது நிறைய சம்பாதிக்கிறேன். வேண்டுமானால் சமையல்காரர் வைத்துக்கொள்கிறேன் என்றேன்.


அதுவும் இல்லையென்றால் வெளியே போய் சாப்பிட்டுக் கொள்கிறோம். எனக்கு இந்த சமையல் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இல்லை என்றும் பதில் சொன்னேன். சமையல் கற்றுக்கொள் என்று சொல்வதை விட சமையல் தெரிந்தவரை திருமணம் செய்து கொள் என்று ஏன் சொல்ல மாட்டேன் என்கிறாய் என்றும் அம்மாவிடம் திருப்பி கேட்டேன். இவர்தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கும் வழக்கத்தை ஏற்க மாட்டேன். சமையல் பெண்கள்தான் செய்ய வேண்டும் என்பதை பெற்றோரே நம்மீது திணித்துக்கொண்டு வருகிறார்கள். இதை நான் எதிர்க்கிறேன். யாருக்கு ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் செய்யலாம்.

ஆர்வம் இல்லாதவர்களை செய்துதான் ஆகவேண்டும் என்று பலவந்தப்படுத்துவது எனக்கு பிடிக்காது. எனது எண்ணத்தை கணவர் நன்றாக புரிந்து கொண்டார். அதனால் எனக்கு சமையல் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.” இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சமூக வலைத்தளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் 2 பெண்கள் புகார்
சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை கோரி, 2 பெண்கள் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தனர்.
2. திருக்கனூர் அருகே போராட்டம் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் மறியல்
திருக்கனூர் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்விடோலினா, சிமோனா ஹாலெப் வெற்றி
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா, சிமோனா ஹாலெப் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
4. சேறும், சகதியுமாக உள்ள தெருவில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
சேறும், சகதியுமாக உள்ள தெருவில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.
5. மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் உடல்கள் அடக்கம் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தல்
புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.