சினிமா செய்திகள்

காதலில் விழுந்த நடிகை டாப்சி + "||" + Fell in love Actress Topsee

காதலில் விழுந்த நடிகை டாப்சி

காதலில் விழுந்த நடிகை டாப்சி
நடிகை டாப்சி டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மரியா கோவை காதலிப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவின.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் காதலில் விழுந்ததை டாப்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“ஒரு கோப்பையை இளவரசி முத்தமிட்டால் அது அழகிய இளவரசனாக மாறிவிடுவதையும் அதை பார்த்து இளவரசி சந்தோஷப்படுவதையும் கதையில் படித்து இருக்கிறோம். அப்போதிலிருந்து ஒரு இளவரசன் கிடைக்க நிறைய கோப்பைகளை முத்தமிட வேண்டும் என்ற பழமொழி நடைமுறைக்கு வந்தது.


நானும் எத்தனையோ கோப்பைளை முத்தமிட்டு கடைசியாக ஒரு இளவரசனை பிடித்து விட்டேன். எனது வாழ்க்கையில் யார் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள நிறைய பேர் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர் கிரிக்கெட் வீரர் இல்லை. இந்த நாட்டை சேர்ந்தவரும் இல்லை. எனக்கு குழந்தைகள் எப்போது வேண்டும் என்று ஆசைப்படுகிறேனோ அப்போது அவர் யார் என்பதை வெளிப்படுத்தி திருமணம் செய்து கொள்வேன்.

மிகவும் ஆர்ப்பாட்டமாக திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினர்களை மட்டும் வைத்து எளிய முறையில் ஒரே நாளில் திருமணத்தை முடித்து விடுவேன்.

திருமணம் என்ற பெயரால் நாள் கணக்கில் விழா எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.” இவ்வாறு டாப்சி கூறினார்.