சினிமா செய்திகள்

ரூ.20 கோடி கேட்கும் கங்கனா: ஜெயலலிதா வாழ்க்கை படமாவதில் தாமதம்? + "||" + Kangana asks for Rs 20 crore Life of Jayalalithaa Delay in film

ரூ.20 கோடி கேட்கும் கங்கனா: ஜெயலலிதா வாழ்க்கை படமாவதில் தாமதம்?

ரூ.20 கோடி கேட்கும் கங்கனா: ஜெயலலிதா வாழ்க்கை படமாவதில் தாமதம்?
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் இயக்குனர் விஜய் ஈடுபட்டு உள்ளார்.
இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளனர். அவரும் கதாபாத்திரத்துக்காக பரதநாட்டியம் மற்றும் தமிழ் கற்று வருகிறார். படத்துக்கு தலைவி என்று பெயர் வைத்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இந்தி பதிப்புக்கு ஜெயா என்று தலைப்பு வைத்தனர். ஆனால் கங்கனா ராணாவத் தலைவி என்ற பெயரையே இந்தி பதிப்புக்கும் வைக்கும்படி கேட்டுக்கொண்டதால் அது ஏற்கப்பட்டு உள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட வேலைகளை இன்னும் தொடங்கவில்லை.


ஜெயலலிதா வாழ்க்கையை ‘குயின்’ என்ற பெயரில் கவுதம் மேனன் வெப் தொடராக தயாரிக்கிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இந்த வெப் தொடர் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த தொடரை ரசிகர்கள் பார்த்தால் தலைவி படத்துக்கான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்ற கருத்து நிலவுகிறது.

அத்துடன் தலைவி படத்தை 3 மொழிகளிலும் எடுக்க ரூ.55 கோடி பட்ஜெட் நிர்ணயித்து உள்ளனர். ஆனால் கங்கனா ரணாவத் ரூ.20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இந்த பிரச்சினைகளால் தலைவி படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் இதனை மறுத்தனர்.