சினிமா செய்திகள்

திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா + "||" + The wedding was celebrated Day Surya-Jyotika

திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா

திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா
சூர்யாவும் ஜோதிகாவும் மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் தங்களது 13-ம் ஆண்டு திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டு உள்ளனர். அவர்களுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யாவும் ஜோதிகாவும் 2006 செப்டம்பர் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்து பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜோதிகா நடிப்பில் நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.


இந்த வருடத்தில் ராட்சசி படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜாக்பாட் என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது கார்த்தியுடன் புதிய படமொன்றிலும், பொன்மகள் வந்தாள் என்ற படத்திலும் நடித்து வருகிறார். சூர்யா நடித்துள்ள காப்பான் படம் வருகிற 20-ந்தேதி திரைக்கு வருகிறது. இதில் மத்திய அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வருகிறார்.

மோகன்லால் பிரதம மந்திரி வேடத்தில் நடித்துள்ளார். கே.வி. ஆனந்த் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார்.