சினிமா செய்திகள்

ரசிகர்கள் யாரும் விளம்பர பேனர்கள் வைக்க வேண்டாம் -நடிகர் விஜய் வேண்டுகோள் + "||" + No fans should put on advertising banners Vijay reqest

ரசிகர்கள் யாரும் விளம்பர பேனர்கள் வைக்க வேண்டாம் -நடிகர் விஜய் வேண்டுகோள்

ரசிகர்கள் யாரும் விளம்பர பேனர்கள் வைக்க வேண்டாம் -நடிகர் விஜய் வேண்டுகோள்
ரசிகர்கள் யாரும் விளம்பர பேனர்கள் வைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபஸ்ரீ (வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெருங்குடி கந்தன்சாவடியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று  முன்தினம் மாலை பணி முடிந்து சுபஸ்ரீ, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அவர் சென்ற போது அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவிலும், ஓரமும் ‘பேனர்’கள் வைத்து இருந்தனர்.

சாலையின் நடுவே இருந்த அ.தி.மு.க. ‘பேனர்’ ஒன்று திடீரென சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய அவர் சாலையில் விழுந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் கோவிலம்பாக்கம் நோக்கி வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறி இறங்கியது. தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கிய சுபஸ்ரீ, அதே இடத்தில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 

இந்தப்பிரச்சினைக்கு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பலத்த கண்டனம் தெரிவித்தனர். உயர்நீதிமன்றமும் கடும் கண்டனத்தை தெரிவித்தது.

பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியான சம்பவத்தின் எதிரொலியாக பேனர் கலாச்சாரத்தை தவிர்க்க அதிமுக, திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இந்தநிலையில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியான சம்பவத்தின் எதிரொலியாக பேனர்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சியில் 5 மண்டலங்களுக்கு ஒரு ரோந்து வாகனம் காவல்துறை உதவியுடன் தனியான எண்ணில் இயங்கும் என மூன்று வட்டார அலுவலகங்களுக்கும் ரோந்து வாகனம் மற்றும் பொதுமக்கள் புகார் அளிக்க தனி எண்கள்  அளிக்கப்பட்டுள்ளது, அதில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் பேனர் வைக்கக்கூடாது என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பேனர்கள் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, பிகில்  பட இசை வெளியீட்டு நிகழ்வின்போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்கக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் 19-ம் தேதி பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெறுவது  குறிப்பிடத்தக்கது.