சினிமா செய்திகள்

“பேனர்கள் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள்” ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் + "||" + Actor Surya reqest to fans Help schools instead of putting banners

“பேனர்கள் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள்” ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

“பேனர்கள் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள்” ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்
பேனர்கள் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

சென்னையில் பேனர் சரிந்து விழுந்து பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியான சம்பவத்தின் எதிரொலியாக ரசிகர்கள் யாரும் விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என்று நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்தார். 

சுபஸ்ரீ உயிரிழப்பின் எதிரொலியாக இனி எந்த நிகழ்விலும் பேனர் வைக்க மாட்டோம் என மதுரை அஜித் ரசிகர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். 

நடிகர் சூர்யாவும், ரசிகர்கள் எந்த ஊரிலும் பேனர்கள் வைக்கக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற காப்பான் படவிழாவின் போது சூர்யா பேசியதாவது:-

ஒருவரின் வாழ்க்கை பற்றி பேசும் கதையை நான் எப்போது தவறவிட மாட்டேன். வேறு ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடித்தால் அது நிச்சயம் வெற்றி பெறும். வாழ்க்கையில் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அதில் நேர்மையாக இருந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். 

தயவு செய்து ரசிகர்கள் எந்த ஊரிலும் பேனர்கள் வைக்கக் வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்ற அவர், பேனர் வைக்காமல் அந்த செலவை கல்வி உதவிக்காக பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியீடு
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
2. “அதிகாலை பயணத்தை தவிர்த்து விடுங்கள்” நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள்
“கட்டுப்பாட்டை மீறி விபத்துகள் நடப்பதால், அதிகாலை பயணத்தை தவிர்த்து விடுங்கள்” என்று நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
3. படக்குழுவினர் 150 பேருக்கு நடிகர் சூர்யா தங்க காசுகள் பரிசு
சூர்யாவின் ‘காப்பான்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தொடர்ந்து சூரரை போற்று படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கினார்.