சினிமா செய்திகள்

புதிய படம் ‘நெற்றிக்கண்’ ரஜினி பட தலைப்பில் நயன்தாரா நடிக்கிறார் + "||" + The new movie Netrikkan Rajini movie Title Nayanthara acting

புதிய படம் ‘நெற்றிக்கண்’ ரஜினி பட தலைப்பில் நயன்தாரா நடிக்கிறார்

புதிய படம் ‘நெற்றிக்கண்’ ரஜினி பட தலைப்பில் நயன்தாரா நடிக்கிறார்
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலில் உள்ளனர். இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ,  இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சொந்தமாக ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி உள்ளார்.


இந்த நிறுவனம் மூலம் அவர் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். திகில் படமாக தயாராகிறது. இந்த படத்தை மிலிந்த்ராவ் இயக்குகிறார். இவர் சித்தார்த், ஆண்ட்ரியா ஆகியோரை வைத்து அவள் என்ற பேய் படத்தை டைரக்டு செய்தவர். நயன்தாரா படத்துக்கு நெற்றிக்கண் என்று பெயர் வைத்து இருப்பதாக விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார்.

நெற்றிக்கண், ரஜினிகாந்த் படத்தின் தலைப்பு ஆகும். தந்தை, மகன் என்று 2 வேடங்களில் அவர் நடித்து இருந்தார். விசுவின் கதையில் கே.பாலசந்தர் திரைக்கதையில் எஸ்.பி. முத்துராமன் இயக்கிய நெற்றிக்கண் படம் 1981-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. லட்சுமி, சரிதா, மேனகா, சரத்பாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.

நெற்றிக்கண் பெயரை வைத்து இருப்பதால் நயன்தாரா படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த தலைப்பை பயன்படுத்த அனுமதி அளித்ததற்காக ரஜினிகாந்துக்கும், கவிதாலயா நிறுவனத்துக்கும் விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. “நெற்றிக்கண்” படத்தை ரீமேக் செய்தால் “தனுஷ் மீது வழக்கு தொடருவேன்” -டைரக்டர் விசு
நெற்றிக்கண் படத்தை தனது அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக் கூடாது என்று டைரக்டர் விசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
2. புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியா? - நடிகை மீனா விளக்கம்
புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக வெளியாக தகவல் குறித்து நடிகை மீனா விளக்கம் அளித்துள்ளார்..