சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகி! + "||" + Keerthi Suresh to play the lead role in Karthik Subburaj movie

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகி!

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகி!
டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் ஒரு புதிய படத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சம் உள்ள படம்.
‘மேயாத மான்,’ ‘மெர்க்குரி’ ஆகிய படங்களை தயாரித்த ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் இந்த படத்தை தயாரிக்கிறார். கல் ராமன், எஸ்.சோமசேகர், கல்யாண சுப்பிரமணியன் ஆகிய மூவரும் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள்.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு கொடைக் கானலில் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மேக்கப் இல்லாமல் நடிக்கிறார்; விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்
விளையாட்டை மையமாக வைத்து அதிக படங்கள் தயாராகின்றன. பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை வைத்து வெளியான கனா பெரிய வெற்றி பெற்றது. தெலுங்கிலும் இந்த படத்தை ரீமேக் செய்தனர்.
2. கீர்த்தி சுரேஷ் கைவசம் படங்கள் இல்லாதது ஏன்?
கீர்த்தி சுரேஷ் இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். அவரின் நடிப்பில் வந்த `மகாநடி' படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
3. கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர்கள்
தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கதையும் கேட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
4. மோகன்லால் மகனுடன் நடிக்க மறுப்பு!
மலையாள பட உலகின் ‘சூப்பர் ஸ்டார்’களில் ஒருவரான மோகன்லாலின் மகன் பிரணவ்.