சினிமா செய்திகள்

பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை இந்துஜா + "||" + Switched to glamor Actress Indhuja

பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை இந்துஜா

பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை இந்துஜா
நடிகை இந்துஜா ‘சூப்பர் டூப்பர்’ என்ற படத்தின் மூலம் கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.
தமிழில் மேயாத மான், மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் இந்துஜா. சமீபத்தில் திரைக்கு வந்த மகாமுனி படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார். அனைத்து படங்களிலும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் வந்த அவர் தற்போது ‘சூப்பர் டூப்பர்’ என்ற படம் மூலம் கவர்ச்சிக்கு மாறி உள்ளார். 

படத்தில் இடம்பெற்றுள்ள குத்து பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் இந்துஜா ஆபாசமாக ஆடி உள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்துஜாவின் கவர்ச்சியால் ‘சூப்பர் டூப்பர்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த படத்தை ஏகே இயக்கி உள்ளார். 

படம் குறித்து நாயகன் துருவா கூறும்போது, ‘‘சூப்பர் டூப்பர் படத்தில் காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் அனைத்தும் இருக்கும். நாயகியும் நானும் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறோம். அதில் இருந்து எப்படி மீள்கிறோம் என்பது கதை. திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும். படத்தில் துணிச்சலான நாகரீக பெண்ணாக இந்துஜா வருகிறார். முந்தைய படங்கள் போல் இல்லாமல் அவரது கதாபாத்திரம் கவர்ச்சியாக இருக்கும். ஷாரா, ஆதித்யா, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள்’’ என்றார்.