சினிமா செய்திகள்

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி? + "||" + Vijay Sethupathi as the villain to Vijay

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி?

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி?
விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதில் விஜய் தந்தை, மகன் என்று இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. மகன் விஜய் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அட்லி இயக்கி உள்ளார். 

அடுத்து மாநகரம் படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இது விஜய்க்கு 64–வது படமாகும். படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இதில் கதாநாயகியாக நடிக்க ராஷி கன்னா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. தற்போது இந்தி நடிகை கியாரா அத்வானியிடம் பேசி வருகிறார்கள்.

இதில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்குமாரின் மங்காத்தா, விஷாலுடன் ‘இரும்புத்திரை’, விஜய் ஆண்டனியுடன் ‘கொலைகாரன்’ ஆகிய படங்களில் அர்ஜுன் நடித்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க சில முன்னணி இந்தி நடிகர்களிடம் பேசி வந்தனர். 

ஆனால் யாரிடமும் கால்ஷீட் இல்லாததால் தற்போது விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதிக்கும் கதை பிடித்துள்ளதால் விஜய்க்கு வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி..?
நடிகர் விஜய்யின் 64-வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.