சினிமா செய்திகள்

நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை- சென்னை ஐகோர்ட் + "||" + Actor Surya's movie Kaappaan no restriction to release Madras highcourt

நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை- சென்னை ஐகோர்ட்

நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை- சென்னை ஐகோர்ட்
நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என கூறி ஜான் சார்லஸ் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்.
சென்னை

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான்  திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் தன்னிடம் கேட்ட கதையை, காப்பான் திரைப்படமாக எடுத்திருப்பதாகக்கூறி குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், கடந்த 2016-ம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குனர் கே.வி.ஆனந்திடம்  தெரிவித்தாகவும்,  எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக ஏமாற்றி தற்போது காப்பான் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறினார்.

இது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் இயக்குனர் கே.வி ஆனந்த் தரப்பில் பதில் மனுவில் வழக்கு தொடர்ந்த நபரை  தெரியாது என்றும், வீண் விளம்பரத்திற்காக வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பதில் மனுக்களை ஏற்று காப்பான் படத்திற்கு எதிரான வழக்கை கடந்த செப்டம்பர் 9ம் தேதி தள்ளுபடி செய்து தனி நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில் தன் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகக் ஜான் சார்லஸ் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி  மணிக்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு  வந்தது.

நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என கூறி ஜான் சார்லஸ் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பதவிக்கு ஏ.பி.சாஹி பெயர் பரிந்துரை
பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சென்னை ஐகோர்ட்டுக்கு பணியிடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
2. பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
3. அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகள் வாங்கிய விவகாரம் : சி.பி.ஐ வளையத்தில் தஹில் ரமானி?
சென்னை ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகள் வாங்கியது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம் - மத்திய அரசு தகவல்
சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
5. நீதிபதி தஹில் ரமானியை பணியிட மாற்றும் பரிந்துரைக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.