சினிமா செய்திகள்

`சாம்பியன்' படத்துக்காக பார்வை இழந்த இளைஞரை பாட வைத்த சுசீந்திரன் + "||" + For the film 'Champion' The young man who lost his vision sang

`சாம்பியன்' படத்துக்காக பார்வை இழந்த இளைஞரை பாட வைத்த சுசீந்திரன்

`சாம்பியன்' படத்துக்காக பார்வை இழந்த இளைஞரை பாட வைத்த சுசீந்திரன்
புதுமுகங்களை அதிக அளவில் அறிமுகப்படுத்தும் இன்றைய முன்னணி டைரக்டர்களில், சுசீந்திரனும் ஒருவர். இவரது இயக்கத்தில் இப்போது, `சாம்பியன்' என்ற படம் வளர்ந்து வருகிறது.
`சாம்பியன்' படத்தில் புதுமுகங்கள் விஷ்வா, மிருநாளினி, சவுமியா ஆகியோர் கதாநாயகன்-கதாநாயகிகளாக அறிமுகம் ஆகிறார்கள்.

கால்பந்து பயிற்சியாளராக `அஞ்சாதே' நரேன், இந்திய அணியின் கேப்டன் ராமன் விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள். டைரக்டர் பாரதிராஜாவின் மகன் மனோஜ், கதாநாயகனின் தந்தையாக நடித்து இருக்கிறார்.

பிசாசு, துப்பறிவாளன், அண்ணனுக்கு ஜே ஆகிய படங்களுக்கு இசையமைத்த அரோல் கரோலி, `சாம்பியன்' படத்துக்கும் இசையமைத்துள்ளார். கார்த்திக் என்ற 19 வயது கண்பார்வையற்ற இளைஞரை பின்னணி பாடகராக டைரக்டர் சுசீந்திரன் அறிமுகம் செய்கிறார்.

படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது நடைபெறுகிறது.