சினிமா செய்திகள்

அரை நிர்வாணமாக ‘வெயில்’ பிரியங்கா! + "||" + Priyanka gets half naked!

அரை நிர்வாணமாக ‘வெயில்’ பிரியங்கா!

அரை நிர்வாணமாக ‘வெயில்’ பிரியங்கா!
“உருகுதே, மருகுதே” பாடல் புகழ் “வெயில்” பிரியங்கா, நீண்ட இடை வெளிக்கு பிறகு ஓ. ராஜா கஜினி இயக்கத்தில், ‘உற்றான்” படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக் கிறார்.
 ‘உற்றான்” படத்தில் “ கமலி” என்கிற கல்லூரிப் பேராசிரியையாக மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். “கமலி” கதாபாத்திரம் பற்றி பிரியங்காவுடன் டைரக்டர் விவரித்தபோது, அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட பிரியங்கா, ‘‘இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்திற்காகத்தான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். தமிழில் மறுபிரவேசமாக எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டது’’ என மகிழ்ச்சி அடைந்த பிரியங்கா, டைரக்டரிடம் ‘‘எப்ப படப்பிடிப்பு? எத்தனை நாட்கள் என் கால்ஷீட் வேண்டும்?’’ என்று ஆர்வமுடன் கேட்டிருக்கிறார்.

``கமலி” கதாபாத்திரம் “உற்றான் ” படத்தின் முதுகெலும்பாக அமையும், கதாநாயகன் நிர்வாணமாக நடித்த காட்சி ஒன்றில், அவருக்கு உள்ளாடை மாட்டிவிட்டு, துணிச்சலாக நடித்திருப்பதோடு, போலீஸ் நிலைய காட்சி ஒன்றில் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் நடிக்காத அளவுக்கு அரை நிர்வாணமாக மிக துணிச்சலாக நடித்துள்ளார். கமலி கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் மிக நீண்ட காலத்திற்கு பேசப்படும்’’ என்கிறார், டைரக்டர் ஓ.ராஜா கஜினி.