சினிமா செய்திகள்

பிரபல இந்தி இயக்குனர் ஷியாம் ராம்சே மரணம் + "||" + Famous Hindi director Shyam Ramsey dies

பிரபல இந்தி இயக்குனர் ஷியாம் ராம்சே மரணம்

பிரபல இந்தி இயக்குனர் ஷியாம் ராம்சே மரணம்
பிரபல இந்தி இயக்குனர் ஷியாம் ராம்சே திடீர் மரணம் அடைந்தார்.
 சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 67.

திகில் படங்களின் முன்னோடி என்று ஷியாம் ராம்சேவை அழைக்கின்றனர். இவரது முதல் படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு துளசி என்ற திகில் படத்தை இயக்கினார். அந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் தொடர்ந்து பேய் படங்களை டைரக்டு செய்தார். புரானி கவேலி, ஹஸ்கிஹானா, தர்வாஜா உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.

20 பேய் படங்களை டைரக்டு செய்துள்ளார். இவர் இயக்கிய அனைத்து திகில் படங்களும் வசூல் குவித்துள்ளன. சத்ருகன் சின்ஹா, பிருதிராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ஷியாம் ராம்சே இயக்கத்தில் நடித்துள்ளனர். ஷியாம் ராம்சே மறைவுக்கு இந்தி நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.