சினிமா செய்திகள்

டிசம்பரில் நயன்தாரா திருமணம்இயக்குனர் விக்னேஷ் சிவனை மணக்கிறார் + "||" + Nayanthara got married in December

டிசம்பரில் நயன்தாரா திருமணம்இயக்குனர் விக்னேஷ் சிவனை மணக்கிறார்

டிசம்பரில் நயன்தாரா திருமணம்இயக்குனர் விக்னேஷ் சிவனை மணக்கிறார்
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய பட உலகில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் நயன்தாராவுக்கு 34 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் ஏற்பட்ட காதல் முறிந்து போனது. அதன்பிறகு நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்து இப்போதுவரை நீடித்து வருகிறது.

இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், கோவில்களுக்கு சென்று வருவதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரே வீட்டில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலை நெருக்கமானவர்கள் மறுத்தனர்.

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வந்த சில படங்கள் தோல்வி அடைந்ததால் திருமணத்துக்கு தயாராவதாக கூறப்படுகிறது. தான் நடிக்கும் நெற்றிக்கண் படத்தில் காதலர் விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக்கி உள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நண்பர்களை அழைத்து நயன்தாரா கொண்டாடினார்.

அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த கொண்டாட்டம் குறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில், “நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை. இது ஆசீர்வதிக்கப்பட்ட பிறந்த நாள்” என்று பதிவிட்டுள்ளார். நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.

வருகிற டிசம்பர் மாதம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.