சினிமா செய்திகள்

வீட்டில் வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்கு + "||" + Actress Bhanupriya sued for molesting minor girl at home

வீட்டில் வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்கு

வீட்டில் வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்கு
நடிகை பானுப்பிரியா, தனது வீட்டில் வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி வரை ஓராண்டு காலம் நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை செய்ததாகவும், அப்போது பானுப்பிரியா உள்ளிட்டோர் சிறுமியை கொடுமைப்படுத்தியதாகவும், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த மார்ச் மாதம் அஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சம்பவ இடம் தொடர்புடைய பாண்டிபஜார்  காவல் நிலையத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை பானுப்பிரியா அவரது தம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சிறார் நீதி சட்டங்கள், அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.