சினிமா செய்திகள்

மணல் கடத்தலுக்கு சவுக்கடி கொடுக்கும் `வீராபுரம் 220' + "||" + Giving whiplash for Sand Smuggling at Veerapuram 220 movie

மணல் கடத்தலுக்கு சவுக்கடி கொடுக்கும் `வீராபுரம் 220'

மணல் கடத்தலுக்கு சவுக்கடி கொடுக்கும் `வீராபுரம் 220'
`அங்காடி தெரு' மகேஷ், மேக்னா, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், `வீராபுரம் 220.'
வீராபுரம் 220 படத்தை சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிக்க, கன்னியபன் குணசேரன் இணை தயாரிப்பில், செந்தில்குமார் டைரக்டு செய்து இருக்கிறார். மணல் கடத்தல் கும்பலுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் படம் தயாராகி இருக்கிறது.

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ``இதுபோன்ற பட விழாக்களில் இருக்கும் கலகலப்பு, தற்போது வரும் பல படங்களில் இருப்பதில்லை. `உங்களை போடணும் சார்' என்றெல்லாம் படம் வரும்போது, மண்ணின் பிரச்சினையை வைத்து படம் எடுத்துள்ள டைரக்டரை பாராட்டியே ஆகவேண்டும்'' என்றார்.