சினிமா செய்திகள்

அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ- கமல்ஹாசன் ஆவேசம் + "||" + Even by negligent officers Even with half-hearted politicians How many more lives will be taken away Kamal Haasan is excited

அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ- கமல்ஹாசன் ஆவேசம்

அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ- கமல்ஹாசன் ஆவேசம்
அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ; அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவீட் செய்துள்ளார்.
சென்னை

தமிழகத்தில் அலட்சியக் கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக  மாற வேண்டும் என கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டரில்  வீடியோ மூலம் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்திவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும்.

" உலகத்தில் கொடுமையான விஷயம், வாழ வேண்டிய பிள்ளைகளின் மரண செய்தியை அவர்களின் பெற்றோர்கள் கேட்பது தான். சுபஸ்ரீயின் மரண செய்தியும் அப்படிப்பட்டது தான். தனது பெண்ணின் ரத்தம் சாலையில் சிந்திக்கிடப்பதை பார்க்கையில் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் திகிலும் பீதியும் ஏற்படும். பெண்ணை, பெண்களை பெற்றவன் என்ற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. இந்த மாதிரி பல ரகுக்களும், சுபஸ்ரீக்களும் அரசின் அலட்சியத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கொஞ்சமாவது அறிவு வேண்டாமா? எங்கே பேனர் வைக்கனும், வைக்க கூடாது என்று கூடவா உங்களுக்கு தெரியாது. இவர்களைப் போன்ற அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ. எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதும், தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதும் தானே இவர்களுக்கு தெரிந்த அரசியல். இந்த மாதிரி ஆட்சிகள் மீது எனக்கு மயிரிழை அளவு கூட மரியாதையும் பயமும் கிடையாது. ஒருவேளை உங்களுக்கு பயம் இருந்தால் என் கையை பிடித்துக் கொள்ளுங்கள்.

மக்கள் நீதி மையம் உங்கள் சார்பாக கேள்விகள் கேட்டும், அதற்கான தீர்வையும் பெற்றுத் தரும். எங்களை ஆள்கிறவர்களை நாங்கள் தான் தேர்வு செய்யனும். ஆனால் நாங்கள் அடிமைகளாக தான் இருப்போம் என கூறினால் அதை விட பைத்தியக்காரத்தனம் எதுவுமே கிடையாது. உங்களை சாதாரண மக்கள்... சாதாரண மக்கள் என்று சொல்லி சொல்லியே என்றும் அடிமையாக வைத்திருக்கிறார்கள். இந்த சாதாரண மக்கள் தான் அசாதாரண தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நான் தின்னமாக உணர்கிறேன். வாருங்கள் தவறுகளை தட்டிக் கேட்போம். புதிய தலைமையை உருவாக்குவோம்". இவ்வாறு கமல் பேசி உள்ளார்.

தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசாவில் இருந்து வந்துள்ள கிராமப்புற குழந்தைகளுடன் இணைந்து மெட்ரோவில் பயணிக்க போகிறேன். அலட்சிய மரணங்களும் கொலைகளே. பேனர் விவகாரம் நடந்த இடத்திற்கு எத்தனை கட்சிகள் சென்றன. அலட்சியம் அதிகமாக கொலைகள் அதிகரிக்க செய்யும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாஸ்டர் பட காட்சிகள் கசிந்த விவகாரம்: தனியார் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட தயாரிப்பாளர் நோட்டீஸ்
நடிகர் விஜயின் ‘மாஸ்டர்’ பட காட்சிகள் கசிந்த விவகாரத்தில் டிஜிட்டல் நிறுவனத்திடம் படத்தின் தயாரிப்பாளர் ரூ. 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
2. சென்னை ஆஸ்பத்திரியில் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை: நலமாக இருப்பதாக டாக்டர் தகவல்
சென்னை ஆஸ்பத்திரியில் நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் நலமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.
3. விஜயின் மாஸ்டர் திரைப்படம் எப்படி இருக்கிறது...?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவா கார்த்திகேயன் சென்னை வெற்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார்.
4. நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் இந்த போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும்: கமல்ஹாசன்
நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் இந்த போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும் என்று ஈரோட்டில் கமல்ஹாசன் பேசினார்.
5. தமிழகத்தில் பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் - பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி
தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அ.தி.மு.க.வே தீர்மானிக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறி உள்ளார்.