சினிமா செய்திகள்

கையில் சுருட்டுடன் ஸ்ரீரெட்டியின் சர்ச்சை படம் + "||" + Curl by hand Shri Reddy's controversial film

கையில் சுருட்டுடன் ஸ்ரீரெட்டியின் சர்ச்சை படம்

கையில் சுருட்டுடன் ஸ்ரீரெட்டியின் சர்ச்சை படம்
நடிகை ஸ்ரீரெட்டி கையில் சிகார் சுருட்டு வைத்துக்கொண்டு போஸ் கொடுத்த சர்ச்சை புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் பட்டியலில் சிக்கினர். தற்போது ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது.

இந்த படத்தில் செக்ஸ் தொல்லை கொடுத்தவர்களை அம்பலப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தை திரைக்கு வர விடாமல் தடுக்க சதி நடப்பதாக ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும், கவர்ச்சி புகைப்படங்களையும் ஸ்ரீரெட்டி வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் சமந்தா மற்றும் தனது புகைப்படங்களை வெளியிட்டு இருவரில் யார் கவர்ச்சியாக இருக்கிறோம் என்று கேட்டு இருந்தார். சமந்தாவை வம்புக்கு இழுத்து இருப்பதாக அவரது ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்தனர். இந்த நிலையில் இன்னொரு சர்ச்சை படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

அதில் ஸ்ரீரெட்டி குட்டை உடை அணிந்து இருக்கிறார். கழுத்தில் செயின், மூக்கில் மூக்குத்தியும் அணிந்து இருக்கிறார். கையில் சிகார் சுருட்டு வைத்துக்கொண்டு ஆபாசமாக போஸ் கொடுத்து இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு வழக்கம் போல் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. சிலர் சுருட்டுடன் போஸ் கொடுத்ததை கண்டித்துள்ளனர்.