சினிமா செய்திகள்

ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல் + "||" + After getting brutally mocked for her ignorance about Ramayana, heres Sonakshi Sinhas advice for jaage hue trolls

ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்

ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்
ராமாயணம் குறித்த எளிமையான கேள்விக்கு பதில் தெரியாததால் பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நெட்டிசன்களால் கிண்டலுக்கு உள்ளானார்.
புதுடெல்லி

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும், 'க்னோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் பங்கேற்பாளரான ருமா தேவி என்பவருடன் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சோனாக்‌ஷியிடம் ராமாயணத்தில் அனுமன் சஞ்சீவி மூலிகையை யாருக்காகக் கொண்டு சென்றார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சரியான பதில் தெரியாத சோனாக்‌ஷி முதலில் ராமன், சீதை என்று சந்தேகமாகக் கூறினார். பின்னர் அவர் தொலைபேசி அழைப்பு உதவியுடன் அக்கேள்விக்கு சரியான பதிலான லக்ஷ்மண் என்ற பதிலை அளித்தார்.

இப்போட்டியில் சோனாக்‌ஷி - ருமா தேவி இணை 12 லட்சம் வரை வென்றனர்.

இந்நிலையில் ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்விக்கு சோனாக்‌ஷிக்கு பதில் தெரியவில்லையா? என்று பலரும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தனர். பல மீம்ஸ்களும்  உருவாக்கப்பட்டன. மேலும், இந்திய அளவில் இதனை நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாகப் பல பதிவுகளிட்டு ட்ரெண்ட் செய்தனர்.

இதற்கு பதில் தனது ட்விட்டரில் பதில் அளித்த சோனாக்‌ஷி 

அன்புள்ள ஜாக் சாயல் பூதங்கள். பித்தகோரஸ் தேற்றம், வெனிஸின் வணிகர், கால அட்டவணை, முகலாய வம்சத்தின் காலவரிசை, எனக்கு வேறு என்ன நினைவில் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டாம். உங்களுக்கு எந்த வேலையும் இல்லை மற்றும் அதிக நேரம் இருந்தால், தயவுசெய்து இவை அனைத்தையும் மீம்ஸ் செய்ய வேண்டாம். நான் மீம்ஸ்களை விரும்புகிறேன் என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. "உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள்" - ரஜினிகாந்துக்கு நடிகை குஷ்பு ஆதரவு
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், நடிகை குஷ்பு இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
2. அஜித்துடன் இணைந்து நடிக்க முடியாதது மிகுந்த கவலை அளிக்கிறது- நடிகர் பிரசன்னா
நடிகர் அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது மிகுந்த கவலையளிப்பதாக நடிகர் பிரசன்னா கூறி உள்ளார்.
3. அஜித் ரசிகர் ஆபாசமான ட்வீட் ; நடிகை கஸ்தூரி எச்சரிக்கை
அஜித் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது ரசிகர்களிடையேயான சண்டை அல்ல. இது பாலியல் அத்துமீறல் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
4. பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்
பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
5. எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அரவிந்த சாமி நடிக்கும் 'தலைவி' பட டீசர்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தலைவி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.