சினிமா செய்திகள்

கல்லி பாய் திரைப்படம் : ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை + "||" + "Gully Boy" Is India's Official Entry For The Oscars

கல்லி பாய் திரைப்படம் : ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை

கல்லி பாய் திரைப்படம் : ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை
ரன்வீர் சிங் நடிப்பில் உருவான கல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மும்பை, 

ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய படம் கல்லி பாய். இந்த வருடம் பிப்ரவரி 14 அன்று வெளியானது. ரூ. 230 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம், இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த சர்வதேச படம் என்ற பிரிவுக்கு இந்தியா சார்பில் இப்படம் ஆஸ்கர் விருதுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதைப் பெறுவதற்கு  இந்தியப் படங்கள் போட்டியிட்டன. 28 படங்கள் அந்தப்பட்டியலில் இருந்த நிலையில், கல்லி பாய் பரிந்துரை செய்யலாம் என்று தேர்வுக்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. 9 தேசிய விருதுகள் பெற்ற வங்காள இயக்குநர் அபர்ணா சென், தேர்வுக்குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.