சினிமா செய்திகள்

‘காவிரி கூக்குரல்’ இயக்கத்துக்கு ‘டைட்டானிக்’ பட ஹீரோ ஆதரவு ‘நதிக்கு புத்துயிர் அளிப்போம்’ என பேஸ்புக் பதிவு + "||" + For the Cauvery crying movement Titanic Movie Hero support

‘காவிரி கூக்குரல்’ இயக்கத்துக்கு ‘டைட்டானிக்’ பட ஹீரோ ஆதரவு ‘நதிக்கு புத்துயிர் அளிப்போம்’ என பேஸ்புக் பதிவு

‘காவிரி கூக்குரல்’ இயக்கத்துக்கு ‘டைட்டானிக்’ பட ஹீரோ ஆதரவு ‘நதிக்கு புத்துயிர் அளிப்போம்’ என பேஸ்புக் பதிவு
‘காவிரி கூக்குரல்’ இயக்கத்துக்கு ‘டைட்டானிக்’ பட ஹீரோ லியானர்டோ டி காப்ரியோ ஆதரவு தெரிவித்துள்ளார். ‘காவிரி நதிக்கு புத்துயிர் அளிப்போம்’ என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
சென்னை,

‘டைட்டானிக்’, ‘தி ஏவியேட்டர்’, ‘தி ரெவனன்ட்’, ‘ஷட்டர் ஐலேண்ட்’, ‘ஐஸ் ஆன் பயர்’ உள்ளிட்ட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்தவர், லியானர்டோ டி காப்ரியோ. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.


சமீபத்தில், சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சம் தொடர்பாக பி.பி.சி.யில் வெளியான ஒரு புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், ‘மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்ற முடியும். இந்தியாவின் தென்கோடி நகரமான சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது. சென்னை வாழ் மக்கள் மழைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்’ என்றும் அவர் கவலையுடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் காவிரி நதியை காப்பாற்றி புத்துயிர் அளிக்கும் வகையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கி இருக்கும் ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்துக்கு நடிகர் லியானர்டோ டி காப்ரியோ ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய நதிகள் கடுமையாக அருகி வரும் வேளையில் அதன் பல சிறு நதிகள் மறைந்து போயிருக்கிறது. இந்த நேரத்தில் காவிரி நதிக்கு புத்துயிர் அளிக்க காவிரி கூக்குரல் இயக்கம் தொடங்கி இருக்கும் ஜக்கி வாசுதேவுடன் நாம் இணைவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘காவிரி கூக்குரல்’ இயக்கம் மூலம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் 242 கோடி மரங்கள் அடுத்த 12 ஆண்டுகளில் நடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு ஏற்கனவே கமல்ஹாசன், பிரபு, ஷாருக்கான், அக்‌ஷய்குமார், அனுபம்கேர், நவாசுதீன் சித்திக், கங்கனா ரணாவத், தமன்னா, காஜல் அகர்வால் போன்ற முன்னணி திரை பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.