சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டாவுடன் காதலா? நடிகை ராஷ்மிகா மீண்டும் விளக்கம் + "||" + With Vijay Deverakonda Love Actress Rashmika Explanation again

விஜய் தேவரகொண்டாவுடன் காதலா? நடிகை ராஷ்மிகா மீண்டும் விளக்கம்

விஜய் தேவரகொண்டாவுடன் காதலா? நடிகை ராஷ்மிகா மீண்டும் விளக்கம்
காதல் இல்லை என்று இருவரும் ஏற்கனவே மறுத்த பிறகும் இந்த வதந்தி தொடர்ந்து பரவுகிறது. இதற்கு ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளத்தில் தற்போது காட்டமாக பதில் அளித்துள்ளார்.
ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய 2 படங்களிலும் இணைந்து நடித்ததை பார்த்தவர்கள் ஜோடி பொருத்தம் சிறப்பாக இருப்பதாக பாராட்டியதுடன் அவர்களுக்குள் காதல் இருப்பதாகவும் கிசுகிசு பரப்பி வருகிறார்கள். இதை நம்பி அவர்களிடம் திருமணம் எப்போது? என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.


காதல் இல்லை என்று இருவரும் ஏற்கனவே மறுத்த பிறகும் இந்த வதந்தி தொடர்ந்து பரவுகிறது. இதற்கு ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளத்தில் தற்போது காட்டமாக பதில் அளித்துள்ளார். “நாங்கள் இருவரும் செய்கிற தொழிலில் முழுமையாக ஒன்றி போகிறோம். 2 படங்களில் சேர்ந்து நடித்தோம். எங்களுக்குள் காதல் இல்லை. இன்னும் 2 ஆண்டுகள் நாங்கள் இருவரும் எந்த படத்திலும் சேர்ந்து நடிக்க மாட்டோம். இதற்கு மேலாவது இந்த காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் ராஷ்மிகா கூறும்போது, “புதிய படமொன்றில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நடிகர், நடிகைகள் எல்லா கதாபாத்திரங்களையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். இதுவரை என்னை, நகரத்து பெண், மாடர்ன் உடை என்றுதான் ரசிகர்கள் பார்த்து இருப்பீர்கள். ஆனால் புதிய படத்தில் கிராமத்து பெண்ணாக வருகிறேன்.

சரித்திர கதை படங்களில் நடிக்கவும் ஆசை இருக்கிறது. அதுமாதிரி கதாபாத்திரத்துக்காக நான் காத்து இருக்கிறேன்.” என்றார்.