சினிமா செய்திகள்

என்டர் தி ட்ராகன்: புரூஸ் லீக்கு நெருக்கமாக இருக்க வலிப்பது போல நடித்தேன் -மனம் திறந்த ஜாக்கி சான் + "||" + VIDEO: When Jackie Chan pretended to be hurt to be close to Bruce Lee

என்டர் தி ட்ராகன்: புரூஸ் லீக்கு நெருக்கமாக இருக்க வலிப்பது போல நடித்தேன் -மனம் திறந்த ஜாக்கி சான்

என்டர் தி ட்ராகன்: புரூஸ் லீக்கு நெருக்கமாக இருக்க வலிப்பது போல நடித்தேன் -மனம் திறந்த ஜாக்கி சான்
என்டர் தி ட்ராகனில் புரூஸ் லீக்கு நெருக்கமாக இருக்க வலிப்பது போல நடித்தேன் என ஜாக்கிசான் மனம் திறந்து உள்ளார்.
மூத்த நடிகரும் அதிரடி நட்சத்திரமான ஜாக்கிசான்  புகழ்பெற்ற தற்காப்புக் கலைஞர் புரூஸ் லீயின் மிகப்பெரிய ரசிகராவார். ஜாக்கிசான் சமீபத்தில் புரூஸ் லீ திரைப்படமான என்டர் தி டிராகன் படப்பிடிப்பை நினைவு கூர்ந்துள்ளார்.

புரூஸ் லீயின் மகள் ஷானன் லீ, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து உள்ளார். லீயுடன் சண்டையிடுவதை ஜாக்கி காணக்கூடிய படத்தின்  கிளிப்களும் வீடியோவில் உள்ளது. ஜாக்கிசான் 1970-களில் ஸ்டண்ட்மேனாக பணியாற்றினார்.

புரூஸ் லீ நடிப்பில் 1973-ம் ஆண்டு வெளியான படம் ‘என்டர் தி ட்ராகன்’.  உலகமெங்கும் பெரும் வெற்றியைக் குவித்த இந்தப் படத்தில் ஜாக்கி சான் ஒரு காட்சியில் தோன்றியிருப்பார். படத்தில் புரூஸ் லீ ஒரு அடியாள் கும்பலைத் தாக்குவது போன்ற ஒரு காட்சியில் புரூஸ் லீயிடம் அடிவாங்கும் அடியாட்களில் ஒருவராக ஜாக்கிசான் நடித்திருப்பார்.

அந்த வீடியோவில் ஜாக்கிசான் கூறியிருப்பதாவது:-

''என்டர் த ட்ராகன்' படத்தில் புரூஸ் லீயுடன் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் அடிவாங்க வேண்டும். எனக்குப் பின்னால் கேமரா இருந்தது. எனக்கு முன்னால் புரூஸ் லீ இருந்தார். நான் அவரை நோக்கி ஓடிச் சென்றேன். திடீரென எனது கண்கள் இருட்டிவிட்டன. அப்போது தான் அவர் ஒரு குச்சியை வைத்து என்னை அடித்ததை உணர்ந்தேன். எனக்கு மயக்கம் வந்துவிட்டது. நான் புரூஸ் லீயைப் பார்த்தேன். அவரோ இயக்குநர் கட் சொல்லும்வரை நடித்துக் கொண்டே இருந்தார்.

பின்னர் குச்சியைத் தூக்கி எறிந்து விட்டு என்னை நோக்கி ஓடி வந்து, என் தலையை தூக்கி ‘மன்னித்து விடு’ என்று கூறினார். எனக்கு வலி போய்விட்டது. நான் அப்போது இளைஞனாகவும் வலிமையாகவும் இருப்பேன். ஆனால் புரூஸ் லீ என்னைப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வலிப்பது போல நடித்தேன். அன்று முழுவதும் அப்படியே செய்து கொண்டிருந்தேன்''.

இவ்வாறு ஜாக்கி சான் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

'என்டர் த ட்ராகன்' வெளியாவதற்கு ஒரு மாதம் முன்னதாகவே புரூஸ் லீ இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் என்ன நடக்கிறது என்று "கடவுளுக்குத் தெரியம்"- நடிகை கங்கனா ரனாவத்
மும்பையில் என்ன நடக்கிறது என்று "கடவுளுக்குத் தெரியம்" என நடிகை கங்கனா ரனாவத் டுவிட் செய்து உள்ளார்.
2. போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நிறுவனத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை நடிகர் சல்மான் கான் மறுப்பு
நடிகர் சல்மான்கானுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ க்வான் நிறுவனத்தில் பங்கு இல்லை என அவரது சட்டக்குழு மறுத்து உள்ளது.
3. தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் அறிக்கை
தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுனுள்ளது.
4. சினிமாத் துறை அதிக நச்சுத்தன்மை கொண்டது; போலி உலகம் -கங்கானா ரனாவத்
விளக்குகளும், கேமராவும் நிறைந்திருக்கும் இந்த போலி உலகம், மாற்று யதார்த்த உலகம் என்ற ஒன்று இருப்பதாக ஒருவரை நம்பவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கங்கானா ரனாவத் கூறி உள்ளார்.
5. கங்கனா ரனாவத் தாகூர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் மத்திய அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு - காங்கிரஸ்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் கங்கனா ரனாவத்‘தாகூர்’ பிரிவைசேர்ந்தவர் என்பதால் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் உதித் ராஜ் தெரிவித்து உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...