சினிமா செய்திகள்

ராமராக ஹிருத்திக் ரோஷன், சீதையாக தீபிகா: 3 மொழிகளில் படமாகும் ராமாயணம் + "||" + Hrithik Roshan as Rama, Deepika as Seetha: Ramayanam in 3 languages

ராமராக ஹிருத்திக் ரோஷன், சீதையாக தீபிகா: 3 மொழிகளில் படமாகும் ராமாயணம்

ராமராக ஹிருத்திக் ரோஷன், சீதையாக தீபிகா: 3 மொழிகளில் படமாகும் ராமாயணம்
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்துள்ளனர். தமிழ், தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற பெயரில் வந்தது. இதில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர். மலையாளத்திலும் ராமாயணத்தை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.
பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த், மது மஞ்சனா, நமித் மல்கோத்ரா ஆகியோர் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ராமாயணம் மீண்டும் படமாகிறது. பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் அதிக பொருட் செலவில் இந்த படத்தை எடுக்கின்றனர். மூன்று பாகங்களாக தயாராகிறது.

இந்த படத்தை தங்கல் படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரி, மாம் படத்தை இயக்கிய ரவி உடையார் ஆகிய இருவரும் இணைந்து டைரக்டு செய்ய உள்ளனர். படப்பிடிப்புக்கு முந்தைய வேலைகள் நடக்கின்றன. இந்த படத்தில் ராமன் கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார். சீதையாக நடிக்க சினேகாவிடம் பேசி வந்தனர். தற்போது அவருக்கு பதில் தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபாசிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராவணன் வேடத்துக்கு பிரபாசின் தோற்றம் பொருத்தமாக இருக்கும் என்கின்றனர்.

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் சம்மதிப்பாரா என்று தெரியவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.