சினிமா செய்திகள்

எனது நடிப்பை கேலி செய்வதா? - டாப்சி ஆவேசம் + "||" + Mocking my acting? - Topsy Anger

எனது நடிப்பை கேலி செய்வதா? - டாப்சி ஆவேசம்

எனது நடிப்பை கேலி செய்வதா? - டாப்சி ஆவேசம்
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வயதான துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் சந்திரோ டோமா, பிரகாஷி தோமர் ஆகிய இருவரும் 65 வயதுக்கு பிறகு துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று 30-க்கும் மேற்பட்ட சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர்.
‘சாந்த் கி ஆங்க்’ என்ற படம்  இவர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இதில் டாப்சி, பூமி பெட்நேகர் ஆகியோர் நடித்துள்ளனர். துஷார் ஹிரானந்தானி இயக்கி உள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் நடித்திருந்த டாப்சியின் மேக்கப் பற்றியும், அவரது வயதான தோற்றத்தையும் சமூக வலைத்தளத்தில் பலரும் கேலி செய்தனர். டாப்சிக்கு பதில் வயதான ஒருவரை நடிக்க வைத்து இருக்கலாம் என்றும் கூறினர்.

இதற்கு பதில் அளித்து டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

“புதிய முயற்சிகளை எதிர்மறையாக அணுகுவது ஆச்சரியமாக உள்ளது. வழக்கமான பாணியில் இருந்து மாற்றத்தை கொண்டு வர நினைப்பவர்களை ஆதரிக்க முடியாத நிலையில் முதுகெலும்பு இல்லாமல் இருக்கிறோம். என்னை கேலி செய்பவர்கள் சரான்ஷ் படத்தில் நடித்த அனுபம் கேரிடமோ, சுனில்தத் தாயாக நடித்த நர்கிஸிடமோ, 3 இடியட்ஸ் படத்தில் கல்லூரி மாணவராக நடித்த அமிர்கானிடமோ கேள்வி கேட்டது உண்டா. குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் எனக்கு மட்டும்தானா. உங்கள் சந்தேகங்கள் தீபாவளியன்று தீர்ந்து விடும்”

இவ்வாறு டாப்சி கூறியுள்ளார்.